/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நவம்பர் மாத அரிசியை இம்மாதம் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு
/
நவம்பர் மாத அரிசியை இம்மாதம் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு
நவம்பர் மாத அரிசியை இம்மாதம் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு
நவம்பர் மாத அரிசியை இம்மாதம் பெறலாம்: கலெக்டர் அறிவிப்பு
ADDED : அக் 19, 2025 02:54 AM
கரூர்: நவம்பர் மாத அரிசியை, இம்மாதம் பெற்று கொள்ளலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பொது வினியோக திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரி-மையற்ற குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காலத்தில், மழை அதிகம் பெய்யலாம் என்பதால், அரிசி அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், நவம்பருக்குரிய அரிசியை மட்டும் இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, கரூர் மாவட்டத்தில் அக்டோபர் மாத அரி-சியை ஏற்கனவே பெற்றவர்களும், இதுவரை பெறாதவர்களும், நவம்பர் மாத ஒதுக்கீட்டை (அரிசி) இம்மாதம் பெற்று கொள்-ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.