/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் தொடக்க விழா
/
குளித்தலையில் என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் தொடக்க விழா
குளித்தலையில் என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் தொடக்க விழா
குளித்தலையில் என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் தொடக்க விழா
ADDED : செப் 30, 2025 01:00 AM
குளித்தலை, குளித்தலை, மாரியம்மன் கோவில் நடுநிலைப் பள்ளியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் முகாம் தொடக்க விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் பத்மாவதி, கலா, வட்டார கல்வி அலுவலர் மணிமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் சகுந்தலா முகாமை தொடங்கி வைத்து பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தாமரைச்செல்வி முகாம் விளக்க உரையாற்றினார்.
கட்டடக்குழு தலைவர் கோபாலதேசிகன், மாரியம்மன் கோவில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி, நகராட்சி கவுன்சிலர்கள் மஞ்சு, கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஒரு வாரம் நடைபெறுகிறது. இதில் மரக்கன்று நடுதல், ஆலய உழவாரப்பணி, பொது மருத்துவ முகாம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சட்ட விழிப்புணர்வு, பாலிதீன் பைகள் அகற்றும் பணி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, யோகா, போதை பொருள் விழிப்புணர்வு பேரணி, பள்ளி வளாகம் துாய்மை செய்தல், செடி கொடி அகற்றுதல் உள்ளிட்ட களப்பணிகள் நடைபெற உள்ளன.