/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் செவிலியர் சங்கம் பங்கேற்கும்'
/
'ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் செவிலியர் சங்கம் பங்கேற்கும்'
'ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் செவிலியர் சங்கம் பங்கேற்கும்'
'ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் செவிலியர் சங்கம் பங்கேற்கும்'
ADDED : டிச 31, 2025 06:16 AM
கரூர்: ''வரும் ஜன., 6ல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்-கேற்போம்,'' என, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பிர-கலாதா தெரிவித்தார்.
கரூர் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்தில், அவர் கூறியதாவது:தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என, இன்றைய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது வாக்குறுதி அளித்தார். அதை நம்பினோம். ஆனால், தி.மு.க., ஆட்சி அமைந்து, ஐந்தாண்டுகள் நிறைவு பெறும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தவில்லை. எங்கள் அமைப்பின், பல அம்ச கோரிக்கைகளை, முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
இதனால், வரும் ஜன., 6ல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தும் வேலை நிறுத்த போராட்-டத்தில், எங்களது அமைப்பை சேர்ந்த, 7,000 நர்-சுகள் பங்கேற்க உள்ளனர். ஓய்வூதிய திட்டம் குறித்து, குழு தலைவர் ககன்தீப் சிங் பேடி, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ள அறிக்கை மீது, எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஜாக்டோ--ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த போராட்-டத்தை, வலுவிழக்க செய்யும் வகையில், ஓய்வூ-திய திட்டம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட-தாக நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் பேபி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனி-ருந்தனர்.

