/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர்கள்

ADDED : மே 13, 2025 01:27 AM
கரூர்,வட்டத்தில், 350 அரசு செவிலியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து கொண்டு, நேற்று பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வெளிப்படையான பணிமாற்ற கலந்தாய்வு நடத்த வேண்டும்,
செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் கோரிக்கை பேட்ஜ் அணிந்தபடி, செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர்.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, மண்மங்கலம், மயிலம்பட்டி, கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 350 செவிலியர்கள் நேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.