/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
/
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
ADDED : ஏப் 27, 2025 04:48 AM
கரூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், கரூர் மாவட்ட, 16 வது மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் செல்வராணி தலை-மையில், சி.எஸ். ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பயனளிப்பு ஓய்-வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை, காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழி-யர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மாவட்ட மாநாட்டில், மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, மாவட்ட துணைத்தலைவர் கீதாஞ்சலி, செயலாளர் மங்கையர்க-ரசி, பொருளாளர் தனலட்சுமி, செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி உள்பட, பலர் பங்கேற்றனர்.