ADDED : ஜூன் 16, 2025 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., வடக்கு கருங்களாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து, 37; அதே பகுதியை சேர்ந்தவர் திருமுருகன், 22, மணிவேல், 37, ஆகிய மூவரும், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு மது குடித்துள்ளனர்.
பின், போதை தலைக்கேறிய நிலையில், கருங்களாப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு தகாத வார்த்தையில் பேசி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுஅமைதிக்கு இடையூறு விளைவித்ததாக, மூன்று பேரை கைது செய்தனர்.