/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாம்பழ குடோன்களில் அதிகாரிகள் சோதனை
/
மாம்பழ குடோன்களில் அதிகாரிகள் சோதனை
ADDED : மே 04, 2024 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சிவராமபாண்டியன் தலைமையில், அலுவலர்கள் கரூர் நகரம், தான் தோன்றிமலை மற்றும் குளித்தலை பகுதிகளில், நான்கு மாம்பழ குடோன்கள் மற்றும் 48 கடைகளில் ரசாயனம் கலந்த மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறதா என, சோதனை செய்தனர்.
அப்போது அழுகிய நிலையில் இருந்த, 36 கிலோ மாம்பழங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், பழங்களை வாங்கும் போது, பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 94440-42322 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.