ADDED : அக் 14, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, ஆண்டிபட்டிக்கோட்டை காமராஜபுரம் பகுதியில், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முதியவருக்கு பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வி.ஏ.ஓ., ராமலிங்கத்-திற்கு தகவல் தெரிவித்தனர். அவர், அரவக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார்? என, விசாரித்து வருகின்றனர்.