/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
16ல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டி
/
16ல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டி
16ல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டி
16ல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு போட்டி
ADDED : ஜூலை 14, 2025 03:55 AM
கரூர்: 'அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, வரும், 16ல் தமிழ் வளர்ச்சித்-துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வரும், 16ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது. இதில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிய-ருக்கு காலை, 9:30 முதல், 1:00 மணி வரையும், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, மதியம், 1:30 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்க-ளுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்கள், இரண்டு பேரை தனியாக தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் முதல் பரிசு, 5,000 ரூபாய்,- இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்,- மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அந்தந்த நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கலந்துகொள்ள வேண்டும். விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்-, 04324-255077 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்-கப்பட்டுள்ளது.