/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரு பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி
/
இரு பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி
ADDED : செப் 09, 2025 01:35 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அருகே கரடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமர், 55. இவரது நண்பர் அரவக்
குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலுாரை அடுத்த குரும்பப்பட்டியை சேர்ந்த முத்துராஜ், 52. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வெஞ்சமாங்கூடலுாரில் இருந்து, நந்தனுார் செல்லும் சாலையில் ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
மாதிரெட்டிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, வெஞ்சமாங்கூடலுாரை சேர்ந்த சந்தான துரை, 40, என்பவர் வேகமாக ஓட்டி வந்த பஜாஜ் பல்சர் பைக், ஹீரோ ஹோண்டா பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
முத்துராஜ் அளித்த புகார்படி, சந்தான துரை
மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.