/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி;மூவர் காயம்
/
கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி;மூவர் காயம்
ADDED : மே 03, 2024 07:17 AM
அரவக்குறிச்சி : பெங்களூரில் இருந்து, துாத்துக்குடிக்கு சென்ற கார் சீத்தப்பட்டி காலனி அருகே கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
துாத்துக்குடியை சேர்ந்தவர் ஹித்ருமைதீன், 55. இவரது மகள் ஜாஸ்மின், 23, மருமகன் லகூத், 31. இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சொந்த ஊர் தூத்துக்குடி செல்வதற்காக, அவர்களுக்கு சொந்தமான மாருதி வேகன் காரில் பெங்களூரில் இருந்து சென்று கொண்டிருந்தனர். துாத்துக்குடியை சேர்ந்த அப்துல் ஜாபர் மகன் ஜாபர் சாதிக், 22, காரை ஓட்டிச் சென்றார்.நேற்று காலை, 6:00 மணியளவில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி காலனி அருகே வேகமாக வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் பயணித்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் கார் ஓட்டுனர் ஜாபர் சாதிக் உயிரிழந்தார்.ஹித்ருமைதீன், ஜாஸ்மின், லகூத் ஆகிய மூன்று பேரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.