/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையால் சின்னவெங்காயம் அறுவடை பணிகள் பாதிப்பு
/
மழையால் சின்னவெங்காயம் அறுவடை பணிகள் பாதிப்பு
ADDED : ஆக 15, 2024 07:42 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மழை காரணமாக சின்னவெங்காயம் அறுவடை பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பகாப்பட்டி, சரவணபுரம், வயலுார், புனவாசிப்பட்டி, அந்-தரப்பட்டி, கணக்கப்பட்டி, குழந்தைப்பட்டி, சிவாயம் ஆகிய இடங்களில் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சின்ன வெங்காயம் அறுவடை பணி துவங்கப்பட்டுள்ளது. ஆனால், மழை காரணமாக சின்னவெங்காயம் அறு-வடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை உலர்த்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அறுவடை தற்போது தற்-காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.