/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் நெரிசல் சம்பவத்தில் சகோதரிகளை இழந்த தம்பி பள்ளிக்கு வந்ததால் காண்போரின் கண்களில் கண்ணீர்
/
கரூர் நெரிசல் சம்பவத்தில் சகோதரிகளை இழந்த தம்பி பள்ளிக்கு வந்ததால் காண்போரின் கண்களில் கண்ணீர்
கரூர் நெரிசல் சம்பவத்தில் சகோதரிகளை இழந்த தம்பி பள்ளிக்கு வந்ததால் காண்போரின் கண்களில் கண்ணீர்
கரூர் நெரிசல் சம்பவத்தில் சகோதரிகளை இழந்த தம்பி பள்ளிக்கு வந்ததால் காண்போரின் கண்களில் கண்ணீர்
ADDED : அக் 07, 2025 01:08 AM
கரூர் கரூர் நெரிசல் விபத்தில் சகோதரிகளை இழந்த தம்பி, 10 நாட்களில் பள்ளிக்கு வந்த போது காண்போரின் மனதை உருக்கியது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டம் கடந்த, 27ல் நடந்தது. இதில், 18 பெண்கள், 13 ஆண்கள், 5 சிறுவர், 5 சிறுமியர் என, 41 பேர் பலியாகினர். நெரிசலில் சிக்கி, 110 பேர் காயமடைந்தனர். தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்திய சம்பவத்தில் மகன், மகள், சகோதரர், சகோதரி ஆகிய சொந்தங்களை பலர் இழந்துள்ளனர்.
விபத்து நடந்த வேலுச்சாமி புரத்தை சேர்ந்தவர் செல்வராணி. இவரது மகள்கள் மோகனபிரியா, 10ம் வகுப்பு கரூர் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியம்மாள், 6ம் வகுப்பு, கோகிலா, 3ம் வகுப்பு, லோகேஸ்வரன், 1ம் வகுப்பு, ரெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
கடந்த, 27ல் விஜயை காண வேண்டும் என்ற ஆவலில், தாய் செல்வராணியுடன் நான்கு பேரும் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பழனியம்மாள், 11, கோகிலா, 8, ஆகியோர் இறந்தனர்.
இந்நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அதில், தன் சகோதரிகளை இழந்த நிலையில், பள்ளிக்கு லோகேஸ்வரன் மட்டும் வந்துள்ளான். அதை பார்த்த சக மாணவ, மாணவியர் மட்டுமின்றி, ஆசிரியர்களின் கண்களையும் கலங்க செய்து விட்டது.
பின்னர் இறந்தவர்களுக்கு பள்ளியில் அஞ்சலி செலுத்தப்
பட்டது. மாணவன் லோகேஸ்வரன் அழுது கொண்டே இருந்தான்.
அவனுக்கு ஆறுதல் சொல்லி
ஆசிரியர்கள் தேற்றினர்.
பழனிம்மாள், கோகிலா ஆகியோருடன் இணைந்து லோகேஸ்வரன் பள்ளி வருவார், உணவு அருந்துவார். அவர்கள், இல்லாமல் தனியாக லோகேஸ்வரன் வந்தது, அவரை மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.