/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு உயர்நிலைப்பள்ளி முன்புறம் திறந்த நிலையில் கழிவுநீர் சாக்கடை
/
அரசு உயர்நிலைப்பள்ளி முன்புறம் திறந்த நிலையில் கழிவுநீர் சாக்கடை
அரசு உயர்நிலைப்பள்ளி முன்புறம் திறந்த நிலையில் கழிவுநீர் சாக்கடை
அரசு உயர்நிலைப்பள்ளி முன்புறம் திறந்த நிலையில் கழிவுநீர் சாக்கடை
ADDED : செப் 27, 2025 01:16 AM
அரவக்குறிச்சி குறுகலான சாலையாக உள்ளதால், மழை காலங்களில் கழிவுநீர் சாக்கடையில் மாணவியர் தவறி விழும் நிலை உள்ளதால், சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளியை ஒட்டி, 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் சாக்கடை, தற்போது வரை கான்கிரீட் போடாமல் உள்ளது. இந்த சாலை குறுகலாக உள்ளதால், மாணவியர் மழை காலங்களில் பள்ளி முடிந்து வெளியே வரும் போது, சாக்கடையில் விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளது.
மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கான்கிரீட் தளம் போட பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் பலமுறை கோரிக்கைகளை வைத்தனர். ஆனால், தற்போது வரை கான்கிரீட் தளம் போடாமல் கழிவு நீர் சாக்கடை திறந்த வெளியிலேயே உள்ளது. எனவே, வரும் மழை காலத்தையாவது கருத்தில் கொண்டு, சாக்கடைக்கு மேல் கான்கிரீட் தளம் அமைத்து தர வேண்டும்.