/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் அன்னதான உண்டியல் திறப்பு
/
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் அன்னதான உண்டியல் திறப்பு
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் அன்னதான உண்டியல் திறப்பு
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் அன்னதான உண்டியல் திறப்பு
ADDED : நவ 28, 2024 01:10 AM
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்
கோவில் அன்னதான உண்டியல் திறப்பு
கோபி, நவ. 28-
பாரியூர், கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், அன்னதான உண்டியல் திறந்து நேற்று காணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது.
கோபி அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோவில்களில், 10 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. மூன்று மாதத்துக்கு ஒரு முறை நிரந்தர உண்டியல்களையும், அன்னதான உண்டியல், மாதந்தோறும் கடைசி வாரம் திறந்து, அதன் காணிக்கை கணக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, அறநிலையத்துறையினர் முன்னிலையில் நேற்று மதியம் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம், 38 ஆயிரத்து, 180 ரூபாயை பக்தர் கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அந்த தொகை அனைத்தும், கோபியில் உள்ள வங்கியில், அன்னதான கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த அக்., மாதத்தில், 23 ஆயிரம் ரூபாயை பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்ததாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.