/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'தி.மு.க., ஆட்சி மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்'

ADDED : ஜூன் 11, 2025 02:28 AM
நாமக்கல், ''தி.மு.க., ஆட்சி மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை கூறி மக்களை குழப்பி வருகின்றன,'' என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில், நாமக்கல் மாவட்டத்தில் நுாலக கட்டடங்களை திறந்து வைத்தார். நுாலகத்தை பார்வையிட்ட அமைச்சர் மதிவேந்தன், வாசிப்போர் பயன்பாட்டுக்கு வழங்கினார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தால், உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தி, தவறு செய்தவர்கள் மீது போலீசார் மூலம் சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே, தி.மு.க., ஆட்சியில் மட்டும் தான் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடப்பதுபோல் கூறி, அவதுாறு பரப்பி வருகின்றன. தி.மு.க., ஆட்சி மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக இந்த அரசின் மீது வேண்டும் என்று அவதுாறு பரப்பி, பொய் பிரசாரங்களை கூறி மக்களை குழப்ப வேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்க்கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன. இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தோல்வியடையும். வரும், 2026ல் நடக்கும்
சட்டசபை தேர்தலில் மீண்டும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.