/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வளாகத்தில் சாதாரண கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வளாகத்தில் சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வளாகத்தில் சாதாரண கூட்டம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வளாகத்தில் சாதாரண கூட்டம்
ADDED : டிச 31, 2024 07:20 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம், பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். இதில், சிவன் கோவில் அருகில் புதிதாக சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய மினிபவர் பம்ப் அமைத்தல், மாரியம்மன் கோவில் தெரு தலைமை நீரேற்றும் நிலையம் பம்ப் ரூம் அருகில், சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய பிளாட்பாரம் பழுது மற்றும் பராமரிப்பு செய்தல், மேளக்காரத் தெருவில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைத்தல். வார்டு எண் 4ல், மேல அக்ரஹாரம் மற்றும் நடு அக்ரஹாரத்தில் வடிகால்களுக்கு மேல் மூடி அமைத்தல், வார்டு எண் 7ல், மலையப்ப காலனியில் மழை நீர் வடிகால் அமைத்தல், வார்டு எண் 14ல் சேவகனுாரில் புதிதாக மயானம் அமைத்தல், மேல அக்ரஹாரத்தில் புதிதாக மயானம் அமைத்தல், கோவக்குளம் குடித்தெருவில் உள்ள மயானத்தை பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.
கரூர், திருச்சி நெடுஞ்சாலை கிருஷ்ணராயபுரம் சாலையில், சாலை விபத்துகள் நடப்பதால் உடனடியாக விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு, அவசர சிகிச்சை மூலம் சிகிச்சை தருவதற்கு ஒரு மருத்துவ மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு மனு அளித்தல், அம்ருத் 2.0 திட்டத்துடன் குளோரினேசன் யூனிட் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் உள்பட பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் (பொறுப்பு )ருக்குமணி, மற்றும் துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.