/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லைபோக்சோவில் பெயின்டர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லைபோக்சோவில் பெயின்டர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லைபோக்சோவில் பெயின்டர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லைபோக்சோவில் பெயின்டர் கைது
ADDED : ஏப் 23, 2025 02:03 AM
கரூர்,:கரூரில் பள்ளி சிறுமியை கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்த பெயின்டரை, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் என்பவரது மகன் யுவன், 19; பெயின்டர். இவர் கரூரை சேர்ந்த, 15 வயதுடைய, தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வரும், மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, 20 மதியம் கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் அருகே, நின்று கொண்டிருந்த மாணவியை, யுவன் கடத்தி அவரது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு, யுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, யுவனை கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கிறார்.
**************************