/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பராமரிப்பு பணிகளால் பாலக்காடு ரயில் சூலுாரில் நிறுத்தப்படும்
/
பராமரிப்பு பணிகளால் பாலக்காடு ரயில் சூலுாரில் நிறுத்தப்படும்
பராமரிப்பு பணிகளால் பாலக்காடு ரயில் சூலுாரில் நிறுத்தப்படும்
பராமரிப்பு பணிகளால் பாலக்காடு ரயில் சூலுாரில் நிறுத்தப்படும்
ADDED : நவ 09, 2024 04:02 AM
கரூர்: பொறியியல் துறை பராமரிப்பு பணிகள் காரணமாக, கரூர் வழி-யாக இயக்கப்படும் திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில், ஒன்பது நாட்களுக்கு சூலுார் சாலை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்-குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்தில், பொறியியல் துறை சார்பில், பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கரூர் வழியாக திருச்சியில் இருந்து, கேரளா மாநிலம் பாலக்காடு வரை இயக்கப்-படும் பயணிகள் ரயில் (எண்- 16843) வரும், 11, 15, 16, 18, 22, 24, 25, 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் சூலுார் சாலை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணிகள் நிறைவு பெற்ற பிறகு, வழக்கம் போல் திருச்சி - பாலக்காடு பயணிகள் ரயில் இயக்கப்படும்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.