/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வர் கோப்பை கால்பந்து பள்ளப்பட்டி மாணவியர் முதலிடம்
/
முதல்வர் கோப்பை கால்பந்து பள்ளப்பட்டி மாணவியர் முதலிடம்
முதல்வர் கோப்பை கால்பந்து பள்ளப்பட்டி மாணவியர் முதலிடம்
முதல்வர் கோப்பை கால்பந்து பள்ளப்பட்டி மாணவியர் முதலிடம்
ADDED : அக் 10, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் நடந்த, முதல்வர் கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டியில் பள்ளப்பட்டி மாணவியர் முதலிடம் பெற்று அசத்தினர்.
கரூர் மாவட்ட அணி சார்பில் பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவியர் அணிக்கும், காஞ்சிபுரம் மாவட்ட அணிக்கும் இடையே மகளிர் கால்பந்து இறுதி போட்டி நடந்தது.
இதில், 6-0 என்ற கோல் கணக்கில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளப்பட்டி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவியரை பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டி தலைவர் ஜனாப் அல்ஹாஜ், முஹம்மது ரபீக் ஆகியோர் பாராட்டி
வாழ்த்தினர்.