/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையால் அவதி
/
பள்ளப்பட்டியில் குடிநீர் பற்றாக்குறையால் அவதி
ADDED : டிச 13, 2025 05:13 AM

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சி, ஏழாவது வார்டு பகுதியில் ஆழ்துளை மின்மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டியை பழுது நீக்கி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளப்பட்டி நகராட்சி ஷாநகர் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள 7வது கிராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாக செயலிழந்த நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பலனில்லை.எனவே, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும்.

