/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேட்டுமருதுார் சாலையோரத்தில் பனை விதை நடவு பணி
/
மேட்டுமருதுார் சாலையோரத்தில் பனை விதை நடவு பணி
ADDED : அக் 04, 2025 01:03 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் சாலையோரத்தில் தென் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மதர் பழனி எஜூகேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து, பனை விதை நடும் நிகழ்வு நடத்தின.
அறக்கட்டளை இயக்குனர் சுகுமார் தலைமை வகித்தார். இதில், சாலையின் இருபுறங்களிலும் பசுமை வளத்தை பாதுகாக்கும் நோக்கில், பனை விதை நடுவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், துாய்மை மேலாண்மை மக்கள் நல இயக்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், குமார மங்கலம் கிராமத்தில் திருச்சி பிஷப் கீப்பர் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், திருச்சி ரோட்டரி கிளப் இணைந்து பனை விதை நடும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்தகுமார், பொருளாளர் ராஜசேகரன், செயலாளர் பரமசிவம் மற்றும் கல்லுாரி பேராசிரியர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.