/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாம்பலம்மன் கோவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
பாம்பலம்மன் கோவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : பிப் 02, 2026 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: லட்சுமணம்பட்டி, பாம்பலம்மன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி கிராமத்தில் பாம்பலம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் சிறப்பு வழிபாடு, விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது. நேற்று தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி பாம்பலம்மன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தல், கோழி அறுத்தல் ஆகிய நேர்த்திக்கடன் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

