/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
/
குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ADDED : மார் 25, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:குருத்தோலை ஞாயிறையொட்டி, கரூரில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நடந்தது.
உலகம்
முழுதும் உள்ள கிறிஸ்தவர்கள், யேசு கிறிஸ்துவை ரட்சகராக
ஏற்றுக்கொண்டு, ஜெருசலேம் நகர வீதிகளில் அழைத்து சென்றனர். அதை
நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய
ஞாயிறை, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி,
நேற்று கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில், பங்கு தந்தை லாரன்ஸ்
தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள்
பங்கேற்றனர். முன்னதாக, கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில்
ஏந்தியபடி, முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்துக்கு ஊர்வலமாக
வந்தனர்.

