/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளிடம் சோதனை
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளிடம் சோதனை
ADDED : டிச 06, 2024 07:28 AM
கரூர்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கரூரில் உள்ள டெக்ஸ்டைல், கொசுவலை, பஸ்பாடி கட்டுதல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் ரயில்களிலேயே பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நேற்று அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எஸ்.ஐ., மகேஸ்வரன் தலைமையில் போலீசார் வேல்முருகன், விவேக் பிரசாத் ஆகியோர் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே, உள்ளே அனுப்பினர்.
ரயில்ஸ்டேஷன் பிளாட்பாரங்களில், ஆங்காங்கே போலீசார் ரோந்து மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து. விசாரித்து அனுப்பி வைத்ததையும் காண முடிந்தது.