/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெயிலால் கொடிவேரியில் குவிந்த பயணிகள்
/
வெயிலால் கொடிவேரியில் குவிந்த பயணிகள்
ADDED : ஏப் 29, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது.
குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை என்பதால், நேற்று காலை முதலே பயணிகள் குவியத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. குளித்த முடித்த சுற்றுலா பயணிகள், தடுப்பணை வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில், தங்கள் குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர்.

