/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈரோடு ரயில் வீரராக்கியத்தில் நிறுத்தம் பஸ்சில் தொங்கியபடி சென்ற பயணிகள்

ADDED : அக் 02, 2024 01:55 AM
ஈரோடு ரயில் வீரராக்கியத்தில் நிறுத்தம்
பஸ்சில் தொங்கியபடி சென்ற பயணிகள்
கரூர், அக். 2-
திருச்சியில் இருந்து, ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் நேற்று, வீரராக்கியத்தில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் பஸ்களில் தொங்கியப்படி பயணம் செய்தனர்.
கரூர் ரயில்வே ஸ்டேஷன் பணிமனையில், நேற்று பராமரிப்பு பணிகள் நடந்தது. இதனால், ஈரோட்டில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் (எண்-06810) நேற்று காலை, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. அதேபோல், திருச்சியில் இருந்து ஈரோடு வரை செல்லும், பயணிகள் ரயில் (எண்-06611) நேற்று காலை, 9:00 மணிக்கு கரூர் அருகே வீரராக்கியம் ரயில்வே ஸ்டே ஷனில் நிறுத்தப்பட்டது.
அதை அறியாமல், திருச்சியில் இருந்து கரூர், ஈரோடு செல்ல இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய பயணிகள், அங்கிருந்து கரூர், ஈரோடுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்சில் ஏறினர்.
சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகள் படிகளில் தொங்கியபடி சென்றனர். இதனால், வீரராக்கியம் பஸ் ஸ்டாப்பில் பரபரப்பு ஏற்பட்டது.