ADDED : ஜன 10, 2026 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: அகில இந்திய ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஓய்வூதியர்களுக்கு உள்ள சரிபார்த்தல் சட்டத்திருத்தம்-2025ஐ மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், 30 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், 18 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும், 65 வயதுக்கு பிறகு கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

