/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 28, 2026 06:09 AM

கரூர்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில் வட்ட தலைவர் துரைக்கண்ணு தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணம் இல்லாத சிகிச்சை அளிக்க வேண்டும். மத்திய அரசு வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தர பாண்டியன், செயலாளர் சக்திவேல், இணைச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பாலகுமரன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

