ADDED : ஜூலை 29, 2026 04:52 AM

அ நிறம் | அளவு
குளித்தலை; குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க, குளித்தலை வட்ட கிளை சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் ஆழ்வார், இணை செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட குறை தீர்க்கும் குழுவில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகளை உறுப்பினராக இணைக்க வலியுறுத்தியும், பேக்கேஜ் தொகையை வெளிப்படை தன்மை-யோடு அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் செய்தனர். சிறப்பாளராக மாவட்ட வருவாய் துறை சங்க செயலாளர் ஜெயவேல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
