ADDED : செப் 30, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
கரூர்; தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தர பாண்டியன் தலை-மையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தம் திரும்ப பெற வேண்டும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், 50 சதவீதம் அகவிலைப்படியை அடிப்படை ஓய்வூ-தியத்துடன் இணைக்க வேண்டும், பழைய ஓய்-வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 65 மற்றும், 75 வயதுடைய ஓய்வூதியர்-களுக்கு, 10.5 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், பொருளாளர் மோகன்குமார், சி.ஐ.டி.யு.,
மாவட்ட செயலாளர் சுப்பிர
மணியன், நிர்வாகிகள் சக்திவேல், ஜெய
வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
