மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு
ADDED : செப் 30, 2026 05:50 AM
குளித்தலை; குளித்தலை அடுத்த வயலுார் பஞ்., நடுப்பட்டி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்குட்பட்ட தெருவில், கடந்த, 2015ல் பஞ்., பொது நிதியிலிருந்து சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அதே ஊரை சேர்ந்த முருகேசன் குடும்பத்தார் குடியிருந்து வரும் தெருவில் உள்ள சிமென்ட் சாலை மற்றும் பொதுவான காலிமனையையும் பயன்படுத்தக்கூ-டாது எனக்கூறி, கிராவல் மண் கொட்டி ஆக்கிர-மிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து, கிராம மக்கள், முருகேசன் மனைவி முத்துலட்சுமியிடம் கேட்ட
போது, 'கடந்த, 2023ல் அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில், 13 சென்ட் நிலம் என் பெயரில் உள்ளது. இந்த இடத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது' என, தெரிவித்தார்.
இந்நிலையில், குளித்தலை சப்-கலெக்டர் சேஷாத்ரி மயும் தீபி சானுவிடம், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது, 'வயலுார் பஞ்., நடுப்பட்டி கிராமத்தில் காலம் காலமாக பயன்பாட்டில் இருந்த பொது இடம் மற்றும் சிமென்ட் சாலையை ஆக்கிரமித்து, சட்ட விரோதமாக பட்டா பெற்றுள்ளார். அந்த பட்-டாவை ரத்து செய்ய வேண்டும்' என, மனு கொடுத்துள்ளோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வரும் காந்தி ஜெயந்தி அன்று, கிராம மக்கள் சார்பில் எங்கள் ஊரில், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என, தெரிவித்-துள்ளனர்.
