/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுத்தமான குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்
/
சுத்தமான குடிநீர் வழங்க மக்கள் வேண்டுகோள்
ADDED : டிச 01, 2024 01:27 AM
குளித்தலை, டிச. 1-
குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்சாயத்து பகுதியில் ஒன்பது கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. காவிரி ஆற்றில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால், திம்மாச்சிபுரம், வீரவள்ளி, ஐநுாற்றுமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு, போர்வெல் ஆழ்துளை குழாய் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நீர், தரமற்ற முறையில் கருமை நிறத்தில் வருகிறது. மழைக்காலங்களில் பொது மக்கள் பாதிக்காத வகையில், மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிப்பு செய்து, வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

