/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் குளம் போல கழிவுநீர் நோய் பரவும் அபாயத்தில் மக்கள்
/
சாலையில் குளம் போல கழிவுநீர் நோய் பரவும் அபாயத்தில் மக்கள்
சாலையில் குளம் போல கழிவுநீர் நோய் பரவும் அபாயத்தில் மக்கள்
சாலையில் குளம் போல கழிவுநீர் நோய் பரவும் அபாயத்தில் மக்கள்
ADDED : அக் 23, 2024 01:37 AM
சாலையில் குளம் போல கழிவுநீர்
நோய் பரவும் அபாயத்தில் மக்கள்
கரூர், அக். 23-
தமிழ் நகரில், சாலையில் குளம் போல கழிவுநீர் தேங்கி இருப்பதால், நோய் பரவும் அபாயத்தில் மக்கள் உள்ளனர்.
கரூர் - -திருச்சி சாலை காந்திகிராமம் அருகில் தமிழ் நகர் உள்ளது. அங்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் போதிய வடிகால் வசதி செய்யப்படவில்லை. தமிழ் நகர், 2வது கிராசில் கால்வாய் வசதி பாதி வரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாய் போல் தேங்கி நிற்கிறது. அங்கிருந்து வழிந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தற்போது மழை பெய்து வருவதால், சாலையில் குளம் போல கழிவு நீர் தேங்கி விடுவதால், துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. புதிதாக சாக்கடை கால்வாய்களை அமைத்து, பழைய கால்வாய்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.