/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான சாலையால் மக்கள் கடும் பாதிப்பு
/
மோசமான சாலையால் மக்கள் கடும் பாதிப்பு
ADDED : நவ 01, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், நவ. 1-
தாளியாம்பட்டி பிரிவு சாலை முதல், புதுப்பட்டி வரை செல்லும் சாலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாளியாம்பட்டி பிரிவு சாலை முதல், புதுப்பட்டி சீகம்பட்டி வரை தார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். தற்போது சாலையின் பல இடங்களில், கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் வாகனங்களில் இருந்து விழுகின்றனர். எனவே, சாலையை புதுப்பிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.