61 ஆண்டுக்கு பின் மணிக்கூண்டு இயங்கியதால் மக்கள் மகிழ்ச்சி
61 ஆண்டுக்கு பின் மணிக்கூண்டு இயங்கியதால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 05, 2026 05:13 AM

கரூர்:கரூர் ஜவஜர் பஜாரில் பழமையான மணிக்கூண்டு, 61 ஆண்டுகளுக்கு பின் இயங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள்
கால நேரங்களை அறிந்துகொள்ள வசதியாக, நகரின் முக்கிய பகுதிகளில்,
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் மணிக்கூண்டு அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் நேரத்தை பார்க்கக் கூடிய வகையில், கடிகாரம் பொருத்தப்பட்ட
கோபுர வடிவில் மணிக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. கடந்த, 1962 பிப்., 2ல்
கரூர், ஜவகர் பஜார் கச்சேரி பிள்ளையார் கோவில் அருகில், நகராட்சி
சார்பில் மணிக்கூண்டு அமைக்கப்பட்டது. இதை அப்போதைய நகராட்சி
தலைவர் ராஜலிங்க முதலியார் திறந்து வைத்தார்.
அன்றைய கரூரின்
தொழில்வளத்திற்கும், நகர வளர்ச்சிக்கும் ஒரு கம்பீர அடையாளமாக இந்த
மணிக்கூண்டு விளங்கியது. 1965ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில்
மணிக்கூண்டு சேதப்படுத்தப்பட்டது.
இந்த மணிக்கூண்டுகள், பழங்கால
கட்டட வடிவமைப்பிற்கு வரலாற்று சான்றாக இருந்தும், அது
சீரமைக்கப்படாமல் இருந்தது. சிதைக்கப்பட்ட கரூரின் வரலாற்று
சின்னம், 61 ஆண்டுகளுக்கு பின் சீரமைக்கப்பட்டது.
தனியார்
அமைப்பு சார்பில், பழைய கட்டு மானத்திற்கு சேதம் விளைவிக்காமல், நவீன
தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கடிகாரத்தை நிறுவி, பழமையும்
புதுமையும் மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மணிக்கூண்டு வெறும் நேரத்தை மட்டும் சொல்லப்போவதில்லை; கரூரின் மறக்க முடியாத வரலாற்று சின்னமாகும்.
