/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிப்பிடத்தை பராமரிக்க மக்கள் வேண்டுகோள்
/
கழிப்பிடத்தை பராமரிக்க மக்கள் வேண்டுகோள்
ADDED : மார் 06, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்-மோகனுார்
சாலை வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக
சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.
அதை
பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பல மாதங்களுக்கு
முன் கழிப்பிடம் சேதம் அடைந்தது. இதுகுறித்து, பொதுமக்கள் புகார்
தெரிவித்தும், வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யாமல், காலம்
கடத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் திறந்தவெளிப்பகுதியை,
கழிப்பிடமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். எனவே, வாங்கல் போலீஸ்
ஸ்டேஷன் அருகே, சேதம் அடைந்த நிலையில் உள்ள, கழிப்பிடத்தைசீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

