/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மயானத்துக்கு பாதை, தகன மேடை வசதி கேட்டு மக்கள் வேண்டுகோள்
/
மயானத்துக்கு பாதை, தகன மேடை வசதி கேட்டு மக்கள் வேண்டுகோள்
மயானத்துக்கு பாதை, தகன மேடை வசதி கேட்டு மக்கள் வேண்டுகோள்
மயானத்துக்கு பாதை, தகன மேடை வசதி கேட்டு மக்கள் வேண்டுகோள்
ADDED : நவ 05, 2024 01:54 AM
குளித்தலை, நவ. 5-
கோடங்கிபட்டியில், பல தலைமுறைகளாக மயான வசதி இல்லாமல் திறந்த வெளியில் இறந்தவரின் உடலை தகனம் செய்து வரும் பொதுமக்கள், நிரந்தரமாக மயான வசதி ஏற்படுத்தி தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை அடுத்த, வயலுார் பஞ்., கோடங்கிப்பட்டியில், 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல தலைமுறைகளாக வசித்து வரும் இவர்கள், இறந்தவர்களின் உடலை கோடங்கிப்பட்டி அருகே உள்ள இடத்தில், திறந்த வெளியில் வைத்து எரியூட்டி தகனம் செய்து வருகின்றனர். தற்போது. மழை காலமாக இருப்பதாலும் மேலும் மயானத்துக்கு தனி பாதை இல்லாததாலும் விளை நிலங்களின் வழியாக உள்ள பாதையில் தான் செல்ல முடிகிறது. இரவு நேரங்களில் உடலை தகனம் செய்ய சொல்லும் போது, மின்விளக்கு வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர், மேலும் விஷ ஜந்துகள் நடமாட்டமும் காணப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள், பலமுறை அரசுக்கு கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த, 2ல் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்த போது, அவரது உடலை பல்லாக்கு தேரில் விளை நிலங்கள் வழியே மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கொண்டு சென்று தகனம் செய்தனர். மயானத்துக்கு செல்ல பொது பாதை வசதி மற்றும் மின் வசதி இல்லாமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தங்கள் பகுதிக்கு நிரந்தர மயான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.