/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
5 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய கூட சமையலறை திறக்காததால் மக்கள் அவதி
/
5 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய கூட சமையலறை திறக்காததால் மக்கள் அவதி
5 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய கூட சமையலறை திறக்காததால் மக்கள் அவதி
5 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய கூட சமையலறை திறக்காததால் மக்கள் அவதி
ADDED : ஜன 22, 2025 07:15 AM
கரூர்: நெரூர் சமுதாயக்கூடத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம், சமையலறை திறக்கப்படாததால், மக்கள் அவதியுறுகின்றனர்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, நெரூர் வடபாகத்தில் சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இங்கு காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. இந்த கூடத்தில் சமையல் அறை வசதியில்லை. இதனால், விசேஷ தினத்தன்று, சமுதாயக்கூட வளாகத்தில் திறந்தவெளி இடத்தில் சமைத்து வந்தனர். மேலும், உணவு அருந்த தனியிடம் இல்லாததால், அங்கேயே கூரை அமைத்து உணவு பரிமாறி வந்தனர்.
கடந்த, 2018-19ம் ஆண்டில், பிரதமர் முன்னோடி கிராம திட்டத்தின் கீழ், சமுதாயக்கூடத்தின் மேல் தளத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில் உணவு அருந்தும் கூடம், 2020-21ம் ஆண்டு மானிய குழு நிதியில், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சமையலறை கட்டப்பட்டுள்ளது. இங்கு, பணிகள் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. இது குறித்து கேட்டால் தெளிவான காரணங்கள் சொல்வதில்லை. தற்போதும் வெளியிலேயே சமைத்து வருகின்றனர்.
வெளியில் கூடாரம் அமைக்க செலவும் அதிகம் என்பதால், பலர் தனியார் திருமண மண்டபங்களை தேடி செல்கின்றனர். மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாத ஏழை மக்கள், பல்வேறு கோவில்களில் வைத்து சிக்கனமாக திருமணத்தை முடித்து கொள்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மூடி கிடக்கும் சமுதாயக்கூட சமையலறை, உணவு அருந்தும் கூடத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.