/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் மக்கள் அவதி
/
ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் மக்கள் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் மக்கள் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேங்கியதால் மக்கள் அவதி
ADDED : செப் 13, 2025 01:33 AM
கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாதையில், தண்ணீர் தேங்கி வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலையில் லாலாப்பேட்டை ரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால், இரவு நேரங்களில் சுரங்கப்
பாதையில் நீர் தேங்குகிறது. இதனால் சுரங்கப்பாதை வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே கேட் வழியாக கடந்து செல்லும் மக்கள், தற்போது அந்த வழியாக சரக்கு ரயில் நின்று விட்டால், சுரங்கப்பாதை வழியாக தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மழை நீரை நிரந்தரமாக அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.