/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
/
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ADDED : அக் 02, 2024 01:56 AM
பள்ளப்பட்டி நகராட்சி தலைவரை
முற்றுகையிட்ட பொதுமக்கள்
அரவக்குறிச்சி, அக். 2-
பள்ளப்பட்டி நகராட்சி யில், 27 வார்டுகள் உள்ளன. பள்ளப்பட்டி நகராட்சி
யின் சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் முனவர் ஜான் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், 12 பெண் கவுன்சிலர்கள், 12 ஆண் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 24, 27 வது வார்டு மக்கள் குடிநீர் சரியாக வருவதில்லை, நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது, நாய்களை கட்டுப்படுத்த பள்ளப்பட்டி நகராட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, நகராட்சி தலைவர் முனவர் ஜானை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பொது மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றினர். நாய்கள் தொல்லைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.