தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை

க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை

க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்க மக்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 28, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை சாலையில், க.பரமத்தியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்-பார்க்கின்றனர்.

கரூர் - கோவை சாலையில், க.பரமத்தி உள்ளது. இதன் வழியாக நாள்தோறும், லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் திருப்பூர், கோவை, நீலகிரி பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கில் செல்கி-றது. இதனால், க.பரமத்தியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அப்போது சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.க.பரமத்தி பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை நிர்-வாகம் கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து, க.பரமத்தி மக்கள் கூறியதாவது:

கரூர் - கோவை சாலை க.பரமத்தி பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடு உள்ளது. போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள் உள்ளன. பல்-வேறு கிராம பகுதிகளில் இருந்து, க.பரமத்தி வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் செல்-கின்றனர். அப்போது, கோவை சாலையில் வேக-மாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதனால், க.பரமத்தி பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us