தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தியில் புதிய வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்

க.பரமத்தியில் புதிய வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்

க.பரமத்தியில் புதிய வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்


ADDED : ஜூன் 28, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 02:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி வட்டாரத்தில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்க விழா நடந்தது.

கலெக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் விஜய-லட்சுமி திட்டப்பணிகளை திறந்து வைத்து பேசி-யதாவது: சமூக பாதுகாப்பு பொறுப்பு நிதி, 1.30 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில், ஈச-நத்தம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், 629 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வரு-கின்றனர். மேல்நிலை வகுப்புகளில் நான்கு பாடப்பிரிவுகள் செயல்படுகிறது. இங்கு, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்-டப்பட்டுள்ளது.

க.பரமத்தி அருகில், எம்.தொட்டம்பட்டியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,050 சதுர அடி மதிப்-பீட்டில் புதிய துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் என மொத்தம், 1.30 கோடி ரூபாயில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டிற்க்கு வந்துள்ளது. இதன் மூலம் கர்ப்-பிணிகள், தாய்மார்களுக்கான முழுமையான சுகாதார சேவை, பிறந்த குழந்தைகள் மற்றும் சிசுக்களுக்கான சுகாதார சேவை, குழந்தைகள், இளம் பருவத்தினருக்கான சுகாதார சேவை கிடைக்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சத்யா, முதன்மை கல்வி அலுவலர் ராஜூ, மாவட்ட நல அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us