/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஆக 17, 2025 01:51 AM
கரூர், க.பரமத்தியில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கரூர்-கோவை சாலையில் க.பரமத்தி உள்ளது. அதன் வழியாக, கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், சின்னதாராபுரம் வழியாக பொள்ளாச்சி, கேரளா பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கின்றன.
இந்த இரண்டு முக்கிய சாலைகளில், க.பரமத்தி, தென்னிலை மற்றும் சின்னதாராபுரம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஆனால், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இல்லை. இதனால், போக்குவரத்து சீரமைப்பு தொடர்பான பணிகளை சட்டம்ஒழுங்கு போலீசாரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே, சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசார் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். இதனால், போக்குவரத்து சீரமைப்பு பணிகளை கவனிக்க முடியமால் போலீசார் திணறுகின்றனர். எனவே, க.பரமத்தியை தலைமையிடமாக கொண்டு, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.