sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆத்துப்பாளையம் அணையை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு

/

ஆத்துப்பாளையம் அணையை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு

ஆத்துப்பாளையம் அணையை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு

ஆத்துப்பாளையம் அணையை சுற்றுலா தலமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : அக் 19, 2025 02:56 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஆத்துப்பாளையம் அணையை, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கழிவுநீர் மூலம், ஆத்துப்-பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சாயக்கழிவு பிரச்-னையால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மழை காரணமாக கடந்த, 2019ல், 18 ஆண்டு-களுக்கு பிறகு அணையின் முழுகொள்ளளவான, 26.9 அடியை தண்ணீர் எட்டியது.அப்போது, அணை நிரம்பிய நிலையில், கடல் போல காட்சிய-ளிக்கும் ஆத்துப்பாளையம் அணையை பார்வையிட திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பய-ணிகள் வந்தனர். அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகு-தியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது, மழை காரணமாக ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்-போது, 8 அடியை தாண்டியுள்ளது. மேலும், வடகிழக்கு பருவ-மழை தீவிரமடையும் பட்சத்தில், ஆத்துப்பாளையம் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், ஆத்துப்பாளையம் அணைப்பகு-தியில், பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை சுற்றுலா தலமாக மாறும்போது, கரூர் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதிகளான க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டார பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்-படும் என்பதில் ஐயமில்லை.






      Dinamalar
      Follow us