/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வழியாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
கரூர் வழியாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூர் வழியாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூர் வழியாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 26, 2025 12:47 AM
கரூர், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக கரூர் ரயில்வே வழித்தடம் உள்ளது. ஆனால், கரூர் வழியாக அதிகளவில் ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. சில குறிப்பட்ட ரயில்களும், ஈரோடு வழியாக மட்டும் இயக்கப்படுகிறது. இதனால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரூர்-சேலம் வழித்தடத்தில் ஆறு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னைக்கு கரூரில் இருந்து, பகல் நேர ரயில் இல்லை.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு, கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க, தென்னக ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.
அதில், கரூர் வழியாக குறிப்பாக சேலம் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட மக்கள் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும். கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்காத பட்சத்தில், கரூர் வரும் பயணிகள் திருச்சி அல்லது ஈரோட்டில் இறங்கி கரூர் வர வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டை அடுத்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. இதனால், கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

