/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாதியில் நிற்கும் சாலை பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
பாதியில் நிற்கும் சாலை பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு
பாதியில் நிற்கும் சாலை பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு
பாதியில் நிற்கும் சாலை பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 25, 2025 01:55 AM
கரூர்:
கடவூர் அருகில், சாலை பணி பாதியில் நிற்பதால் பஸ் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கடவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, கொண்டப்பநாயக்கனுாரிலிருந்து புங்கம்பாடி வழியாக பொன்னணியாறு அணை வரை, 4 கி.மீ., துாரம் கிராம சாலை உள்ளது. இதன் வழியாக பஸ் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. கடந்த மாதம், 1.85 கோடி ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதையடுத்து, பழைய சாலையயை கொத்தி எடுத்து, புரட்டி போட்டனர், பின் சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சாலை பணி முடிவு பெறாமல் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வழியில், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதையில் இயங்கி வந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. நடந்து செல்ல முடியாத நிலையில், இடறி கீழே விழுகின்றனர்.
பொன்னணியாறு அணை செல்லும் சாலை என்பதால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முடங்கிய பணிகளை மீண்டும் துவக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.