/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளி முடிந்து ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
/
தீபாவளி முடிந்து ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
தீபாவளி முடிந்து ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
தீபாவளி முடிந்து ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
ADDED : அக் 22, 2025 01:34 AM
குளித்தலை, குளித்தலை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மற்றும் அரசு, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், வெளி மாவட்டங்களுக்கு சென்று தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் வசித்த மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் வந்திறங்கினர். அவர்கள், குடும்பத்துடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி முடித்தனர்.
தொடர்ந்து, மீண்டும் பள்ளி, கல்லுாரி மற்றும் பணிபுரிபவர்கள், அந்தந்த பகுதிகளுக்கு செல்வதற்காக, நேற்று மதியம் முதல் குளித்தலை பஸ் ஸ்டாண்டில் திரண்டனர். இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதலே மழை பெய்து கொண்டே இருந்ததால் சிரமத்துக்குள்ளாகினர்.