/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிருஷ்ணராயபுரம் மக்கள் அவதி
/
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிருஷ்ணராயபுரம் மக்கள் அவதி
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிருஷ்ணராயபுரம் மக்கள் அவதி
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிருஷ்ணராயபுரம் மக்கள் அவதி
ADDED : ஏப் 29, 2025 01:47 AM
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு டவுன் பஞ்., சார்பில் காவிரி நீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது காவிரி நீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை. தினமும் ஒரு மணி நேரம் திறந்து விடப்படும் காவிரி நீர், தற்போது பாதியாக குறைக்கபட்டு, 30 நிமிடங்கள் மட்டுமே வினியோகம் நடக்கிறது.
இதனால் குடிநீர் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், தங்கு தடையின்றி நீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.