/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மயானம் கட்ட இடையூறு டி.சிவன் காலனி மக்கள் மனு
/
மயானம் கட்ட இடையூறு டி.சிவன் காலனி மக்கள் மனு
ADDED : ஜூலை 22, 2025 01:17 AM
கரூர், மயானம் கட்ட இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தும்பிவாடி பஞ்.,க்குட்பட்ட டி.சிவன் காலனி மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
தும்பிவாடி பஞ்.,க்குட்பட்ட டி.சிவன் காலனியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், நிரந்தரமாக இறந்தவர்களை தகனம் செய்ய மயானம் இல்லை. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. 2025-26ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மயானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் இடையூறு செய்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயானம் கட்டும் பணியில் பிரச்னை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.